உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தங்கவயல் தேவி கருமாரியம்மன் கோவிலில் நாளை கும்பாஷேகம்

தங்கவயல் தேவி கருமாரியம்மன் கோவிலில் நாளை கும்பாஷேகம்

தங்கவயல்: ராபர்ட்சன் பேட்டை எம்.ஜி.மார்க்கெட் பகுதியில் உள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலையில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து தாய்வீட்டு சீதனம் கொண்டு வரப்படுகிறது,இதை தொடர்ந்து பூஜைகள், ஸ்ரீ மஹா கணபதி ஹோமம், ஸ்ரீ மஹாலட்சுமி ஹோமம், ஸ்ரீ நவகிரஹ ஹோமம், தன பூஜை, பூர்ணாஹுதி, தீபாராதனை; அதன் பின் வாஸ்து சாந்தி, பிரவேச பலி, மிருத்சங்கரி ஹனம் பூஜை, திசா ஹோமம், தீபாராதனை ஆகியவை நடக்கின்றன. இதற்காக ஏழு குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.நாளை காலையில் அக்னிகார்யம், தத்துவார்ச்சனை, நாடி சந்தானம், 108 மூல மந்திர ஹோமம், 108 திரவிய ஹோமம் மஹா பூர்ணாஹுதி, இரண்டாம் கால யாக பூஜை, யாத்ராதானம், மஹா தீபாராதனை, கலசம் புறப்பாடு; காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் விமான, மூலவர் மஹா கும்பாபிஷேகம், மஹா தீபாராதனை நடக்கிறது.கும்பாபிஷேகத்தை, சென்னை திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் அறங்காவலர் சந்திரசேகர் செட்டி பத்மாவதி ஆகியோர் தலைமையில் கருமாரியம்மன் கோவில் மணிகண்ட சிவாச்சாரியார் கே.ஸ்ரீதர் சிவாச்சாரியார் நடத்தி வைக்கின்றனர்.ஏற்பாடுகளை தர்மகர்த்தா கோவிந்தராஜ் மற்றும் கோவில் கமிட்டியினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை