உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மொழிப்போர் தியாகிகள் தினம் தங்கவயலில் அனுசரிப்பு

 மொழிப்போர் தியாகிகள் தினம் தங்கவயலில் அனுசரிப்பு

தங்கவயல்: தங்கவயல் தமிழ்ச் சங்கம் சார்பில் இம்மாதம் 5, 6, 7 ஆகிய நாட்களில் மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் முதல் மொழியாக, மாநில மொழியான கன்னடத்தில் தான் படிக்க வேண்டும் என்ற கோகாக் பரிந்துரையை அரசு அமல் படுத்த முயன்றபோது, மாநில அளவில் சிறுபான்மை மொழியினர் போராட்டம் நடத்தினர். தங்கவயலில் மாணவர்கள் நடத்திய ஊர்வலத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் பால்ராஜ், பரமேஸ், உதயகுமார், மோகன் ஆகிய நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த நாளை, தங்கவயலில் மொழிப்போர் தியாகிகள் தினமாக ஆண்டுதோறும் கடைபிடித்து வருகின்றனர். இவர்களை நினைவு கூரும் வகையில், ஆண்டு தோறும் ஜூலை 6ம் தேதி, தங்கவயல் தமிழ்ச் சங்கத்தில் நினைவு நாள் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !