உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மொழிப்போர் தியாகிகள் தினம் தங்கவயல் நகரில் அனுசரிப்பு

 மொழிப்போர் தியாகிகள் தினம் தங்கவயல் நகரில் அனுசரிப்பு

தங்கவயல்: தங்கவயலி ல், மொழிப்போர் தியாகிகள் தின ம் அனுசரிக்கப்பட்டது. கர்நாடகாவில், தாய்மொழியான கன்னடாவை முதல்மொழி பாடமாக படித்து வந்ததை தவிர்க்கும், கோகாக் பரிந்துரையை கர்நாடக அரசு அமல் படுத்த முயன்றதை எதிர்த்து, மாநிலத்தில் சிறுபான்மை மொழியினர், 1982 ஜூலை 5, 6, 7, ஆகிய மூன்று நாட்கள் போராட்டம் நடத்தினர். தங்கவயல் மாணவர்கள் நடத்திய ஊர்வலத்தில் தடியடி, துப்பாக்கி சூடு நடந்தது. அதில் தமிழ் இளைஞர்கள் பரமேஸ், பால்ராஜ், உதயகுமார், பரமேஸ், மோகன் ஆகிய நான்கு பேர் உயிரிழந்தனர். இவர்களின் 44ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி, நேற்று, தங்கவயல் தமிழ்ச் சங்கம்; நாம் தமிழர் கலை இலக்கிய பாசறை சார்பில் சாம்பியன் ரீப் ஆல்மா தொழிற்பயிற்சி பள்ளி. கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் உரிகம், என்.டி.பிளாக், சாம்பியன் ரீப் ஆகிய இடங்களில் உள்ள தியாகிகள் நினைவு துாண்கள் உள்ள இடங்களில்; வீரமா முனிவர் தமிழ்மன்றம் சார்பில் சாம்பியன் ரீப் 'பி' பிளாக் பகுதியிலும் நினைவஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது. பங்கேற்ற பலர் மலர் துாவி, புகழ் அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை