மேலும் செய்திகள்
பன்னரகட்டா பூங்கா கட்டணம் ஆக., 1 முதல் உயர்வு
30-Jul-2025
ஆனேக்கல்: வாகனத்தில் சபாரி சென்றபோது, பின்னால் ஓடி வந்த சிறுத்தை, சிறுவனை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூரு ரூரல் மாவட்டம், ஆனேக்கல்லில் உள்ள பன்னரகட்டா தேசிய பூங்காவுக்கு நேற்று மதியம் 13 வயது சிறுவனுடன் ஒரு குடும்பத்தினர் வந்திருந்தனர். ஜீப்பில் சபாரி சென்று கொண்டிருந்தனர். அப்போது சிறுத்தை ஒன்று, சாலையில் நடந்து சென்றது. இதை பார்த்த ஓட்டுநர், வாகனத்தை நிறுத்தினார். சில நிமிடங்களுக்கு பின், நிதானமாக ஓட்டிச் சென்றார். இவ்வேளையில் வாகனத்தில் பின்னால் ஓடி வந்த சிறுத்தை, வாகனத்தில் இருந்த ஜன்னல் வழியாக கால்களால் பற்றியது. இதில் ஜன்னலோரம் அமர்ந்திருந்த சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது. சிறுத்தை நகத்தால் கீறியது. சிறுவன் அலறினான். காயமடைந்த சிறுவன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பினான். வாகனத்தின் பின்னால் சிறுத்தை ஓடுவது, சிறுவனை தாக்குவதை பின்னால் மற்றொரு வாகனத்தில் சபாரி சென்றவர், தன் மொபைல் போனில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. பன்னரகட்டா பூங்கா இயக்குநர் சூர்ய சேன் கூறு கையில், “பன்னரகட்டா தேசிய பூங்காவுக்குள் சபாரி செல்லும் பஸ் மற்றும் ஜீப்களில் சிறி தாக துவாரம் உள்ளது. அதை மூடும்படி உத்தரவிட்டுள்ளோம். “வரும் நாட்களில் இது போ ன்ற சம்பவங்கள் நடக்காமல், எச்சரிக்கையாக இருப்போம். இது பற்றி ஊழியர்களுக்கும், ஓட்டுநர்களுக்கும் உத்தரவிட்டுள்ளோம்,” என்றார்.
30-Jul-2025