உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தாத்தாவை கொன்ற பேரனுக்கு ஆயுள் சிறை

தாத்தாவை கொன்ற பேரனுக்கு ஆயுள் சிறை

சித்ரதுர்கா: தாத்தாவை கொன்ற பேரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, சித்ரதுர்கா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சித்ரதுர்கா மாவட்டம், ஹொளல்கெரே தாலுகாவின் சித்ரஹள்ளி கொல்லரஹள்ளி கிராமத்தில் வசித்தவர் ஈஸ்வரப்பா, 70. இவரது பேரன் சித்ரலிங்கப்பா, 25. தன் தாத்தாவிடம் இவர் மூன்று லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இதில் 75,000 ரூபாயை திருப்பிக் கொடுத்தார். மீதித் தொகையை தராமல் இழுத்தடித்தார். இதற்கிடையே சித்ரஹள்ளியின் பெட்ரோல் பங்க் அருகில், தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தை, குறைந்த விலைக்கு ஈஸ்வரப்பா விற்றுள்ளார். இது சித்ரலிங்கப்பாவுக்கு பிடிக்கவில்லை. இதே காரணத்தால் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. இதனால் தன்னிடம் வாங்கிய கடன் தொகையை, உடனடியாக தரும்படி பேரனுக்கு ஈஸ்வரப்பா நெருக்கடி கொடுத்தார். கோபமடைந்த பேரன், தாத்தாவை கொலை செய்ய திட்டமிட்டார். கடந்த 2022 ஜூலை 9ம் தேதி, அரசனகட்டே கிராமத்தின் அருகில் தாத்தாவை அழைத்துச் சென்று, கண்மூடித்தனமாக தாக்கினார். இதில் அவர் இறந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சித்ரலிங்கப்பாவை கைது செய்தனர். விசாரணையை முடித்து, சித்ரதுர்கா முதன்மை மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையில் குற்றம் உறுதியானதால், இவருக்கு ஆயுள் தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ரோணா வாசுதேவ், நேற்று தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை