உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / லிங்காயத் அமைச்சர்கள் ராஜினாமா காங்., - எம்.எல்.ஏ., காட்டம்

லிங்காயத் அமைச்சர்கள் ராஜினாமா காங்., - எம்.எல்.ஏ., காட்டம்

தாவணகெரே : ''ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை கண்டித்து, லிங்காயத் சமுதாய அமைச்சர்கள், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்,'' என சென்னகிரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சிவகங்கா பசவராஜ் வலியுறுத்தினார்.தாவணகெரேவில் நேற்று அவர் அளித்த பேட்டி:காங்கிரஸ் அரசில் லிங்காயத் சமுதாயத்தின், ஏழு அமைச்சர்கள் உள்ளனர். ஆனால், இவர்கள் ஜாதி கணக்கெடுப்பு அறிக்கையை எதிர்த்து, குரல் எழுப்பவில்லை. இது குறித்து ஆலோசிக்க, நான் போன் செய்தாலும் எடுக்கவில்லை. அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரேவையும் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அவரும் எடுக்கவே இல்லை.இந்த ஏழு அமைச்சர்களும் திறமை இல்லாதவர்கள். இவர்கள் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். ஒக்கலிகர் சமுதாயத்துக்கு அநியாயம் நடந்துள்ளது என்றவுடன், துணை முதல்வர் சிவகுமார், தன் சமுதாய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்தினார். இதற்காகவே சிவகுமாரை எங்களுக்கு அதிகம் பிடிக்கிறது. ஆனால், லிங்காயத் சமுதாய அமைச்சர்கள் ஆலோசிக்கவே இல்லை.எங்கள் சமுதாய அமைச்சர்கள், தங்களின் சுயநலத்துக்காக மட்டுமே அரசியல் செய்கின்றனர். அவர்களுக்கு ஜாதி கணக்கெடுப்பு அறிக்கை குறித்து, சிந்தனை இல்லை. எந்தெந்த சமுதாயத்தினருக்கு, அநியாயம் நடந்துள்ளதோ, அந்த சமுதாயத்தினர் ஒன்று சேர்ந்து ஆலோசனை நடத்துவோம். இந்த அறிக்கையை நிராகரித்து, மறு ஆய்வு நடத்த வேண்டும்.எங்கள் தொகுதியில், நானும் ஆய்வு நடத்துகிறேன். இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் அறிக்கை அளிப்பேன். நாளை (இன்று) நடக்கும் ஆலோசனை கூட்டத்தில், ஜாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட வேண்டாம். அனைத்து ஆய்வுகளும் முடிந்த பின், வெளியிடட்டும்.எங்கள் தொகுதிகளில் மக்களின் கேள்விகளுக்கு நாங்கள்தான் பதில் அளிக்க வேண்டும். அனைத்து சமுதாயத்தினருக்கும் விளக்கம் அளிக்க வேண்டும். மூத்த தலைவர் சிவசங்கரப்பா கூறியதை, நான் ஆமோதிக்கிறேன். அவர் மூத்தவர். அவரது பேச்சில் உண்மை இருக்கும். ஒக்கலிகர், லிங்காயத் மட்டுமல்ல, அநியாயம் இழைக்கப்பட்ட மற்ற சமுதாயங்களும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை