உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 17 வயது சிறுமி பலாத்காரம் லோகேஸ்வர மஹராஜ் கைது

17 வயது சிறுமி பலாத்காரம் லோகேஸ்வர மஹராஜ் கைது

பெலகாவி: பெலகாவி மாவட்டம், ராய்பாக் தாலுகாவின் மேகளி கிராமத்தில் ராம மந்திர் மடம் நடத்தி வருபவர் லோகேஸ்வர மஹராஜ், 45. இவரது பக்தர் ஒருவரின் 17 வயது மகளுக்கு, அவ்வப்போது உடல் நிலை பாதிக்கப்பட்டது. மகளை குணப்படுத்தும்படி, மடத்தில் விட்டுச் செல்வார். சில நாட்களுக்கு பின், வீட்டுக்கு அழைத்துச் செல்வார்.மடத்திற்கு மகளை அழைத்து வந்து 13ம் தேதி விட்டுச் சென்றார். 16ம் தேதி சிறுமியின் தந்தை, பாகல்கோட்டின் மஹாலிங்கபுரா பஸ் நிலையத்தில் காத்திருப்பதாகவும், அங்கு தன் மகளை அழைத்து வரும்படி சாமியாரை கேட்டுக்கொண்டார். அதன்படி சிறுமியை லோகேஸ்வர மஹராஜ் ஒப்படைத்தார்.வீட்டுக்குச் சென்றதும், தன் பெற்றோரிடம் சிறுமி, தன்னை சாமியார் பலாத்காரம் செய்ததை கூறினார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மறுநாள் பாகல்கோட்டின், நவநகர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.சிறுமியை போலீசார் விசாரித்தபோது, ராய்ச்சூருக்கும் பாகல்கோட்டுக்கும் அடுத்தடுத்த நாட்களில் லோகேஸ்வர மஹராஜ் அழைத்துச் சென்று, லாட்ஜ் ஒன்றில் தங்கவைத்து, பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.அத்துடன் நடந்ததை வெளியே கூறினால் கொலை செய்வதாகவும் சாமியார் மிரட்டியுள்ளார். 21ம் தேதி, இந்த வழக்கு, பெலகாவியின் மூடலகிக்கு மாற்றப்பட்டது.போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், லோகேஸ்வர மஹராஜை, நேற்று கைது செய்தனர்.இதுகுறித்து பெலகாவி எஸ்.பி., பீமா சங்கர் குளேத் கூறுகையில், “சிறுமியை பலாத்காரம் செய்தது குறித்து, லோகேஸ்வர மஹராஜை கைது செய்து, விசாரித்து வருகிறோம். பக்தர்களின் நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி, சிறுமியை அவர் பலாத்காரம் செய்துள்ளார்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை