உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெலகாவியில் பவன் கட்டும் மஹா., அரசு

பெலகாவியில் பவன் கட்டும் மஹா., அரசு

பெலகாவி : கர்நாடகாவின், பெலகாவியில் 'மஹாராஷ்டிர பவன்' கட்ட, அம்மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.கர்நாடகா -மற்றும் மஹாராஷ்டிரா இடையே, எல்லை பிரச்னை, மொழி விவாதம் பல ஆண்டுகளாக நடக்கிறது. இப்போதும் நீறுபூத்த நெருப்பாக உள்ளது. பெலகாவி தன்னுடையது என, மஹாராஷ்டிரா உரிமை கொண்டாடுகிறது. இதற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெலகாவி கர்நாடகாவின் பிரிக்க முடியாத அங்கம். இதை வசப்படுத்த முற்பட்டால் மவுனமாக இருக்க மாட்டோம் என, எச்சரித்தனர்.இதற்கிடையே பெலகாவியில், மஹாராஷ்டிர பவன் கட்ட, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் புதிய விவாதத்தை, மஹாராஷ்டிர அரசு உருவாக்கியுள்ளது. இவ்விஷயத்தை கர்நாடக அரசு பொருட்படுத்தாமல், மவுனமாக உள்ளது என, கன்னட அமைப்பினர் அதிருப்தியில் உள்ளனர்....பாக்ஸ்...* இடம் உண்டுநமது அரசு, டில்லியில் 'கர்நாடக பவன்' கட்டியுள்ளது. அதே போன்று மஹாராஷ்டிர அரசு, பெலகாவியில் பவன் கட்ட முடிவு செய்துள்ளது. கூட்டுறவு நடைமுறையில் இதற்கு இடம் உள்ளது.- சித்தராமையா, முதல்வர்***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ