உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பிரியங்க் கார்கேயை ஆபாசமாக திட்டிய மஹாராஷ்டிரா நபர் கைது

பிரியங்க் கார்கேயை ஆபாசமாக திட்டிய மஹாராஷ்டிரா நபர் கைது

பெங்களூரு: ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வலியுறுத்தியதற்காக, அமைச்சர் பிரியங்க் கார்கேயை ஆபாசமாக திட்டிய மஹாராஷ்டிரா நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு, பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டுமென, முதல்வர் சித்தராமையாவுக்கு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங்க் கார்கே கடிதம் எழுதியிருந்தார். இதனால், தனக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதாக அமைச்சர் பிரியங்க் கார்கே கூறினார். தன்னை ஒருவர் ஆபாசமாக திட்டிய ஆடியோவையும் அவர் வெளியிட்டார். அமைச்சர் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, பெங்களூரு சதாசிவநகர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவானது. ஆபாசமாக திட்டியவரின், 'மொபைல் போன்' எண் மூலம், போலீசார் விசாரித்தனர். விசாரணையில் பிரியங்க் கார்கேயை ஆபாசமாக திட்டியது, மஹாராஷ்ராவின் சோலாப்பூரை சேர்ந்த தினேஷ் நரோனி, 38, என தெரிந்தது. அவரை கைது செய்ய சதாசிவநகர், கலபுரகி போலீசார் இணைந்து மஹாராஷ்டிரா சென்றனர். மஹாராஷ்டிராவின் லத்துாரில் சுற்றித்திரிந்த தினேஷ் நரோனி நேற்று கைது செய்யப்பட்டார். உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பெங்களூரு அழைத்து வரப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று பேசிய, பிரியங்க் கார்கே மீது கோபத்தில் இருந்தபோது, குடிபோதையில் அவருக்கு போன் செய்து ஆபாசமாக திட்டியது தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் ஆபாசமாக திட்டியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பிரியங்க் கார்கேயின் தொகுதியான கலபுரகியின் சித்தாபூரில் பிளாக் காங்கிரசார் நேற்று போராட்டம் நடத்தினர். கடைகள் அடைக்கப்பட்டன. முக்கிய சதுக்கங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார், சாலையில் டயர்களுக்கு தீ வைத்தனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை