மகேஷ் திம்மரோடி ஓராண்டு வெளியேற்றம்
மங்களூரு: தர்மஸ்தலாவில் பல பெண்களின் உடல்களை புதைத்ததாக பொய் புகார் அளித்த சின்னையாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த ராஷ்ட்ரீய ஹிந்து ஜாக்ரன வேதிகே அமைப்பு தலைவர் மகேஷ் திம்மரோடியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சின்னையா உடல்களை புதைத்தது குறித்து மகேஷிடம் பேசும் வீடியோ வெளியானது. இந்த வீடியோ இணையத்தில் பரவியது. இந்நிலையில், புத்துார் போலீஸ் ஏ.சி., ஸ்டெல்லா வர்கீஸ், பன்ட்வால் போலீஸ் டி.எஸ்.பி., ராகவேந்திரா ஆகியோர் மகேஷ் திம்மிரோடி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதாக தங்கள் மேலதிகாரிகளிடம் கூறினர் . மாவட்ட போலீஸ் எஸ்.பி., அருண் கூறியதாவது: மகேஷ் திம்மரோடி மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன. அவர் தனக்கு எதிரான ஆதாரங்களை அழிக்க முயல்வதாக கூறப்பட்டது. இதனால், அவரை நாடு கடத்த வேண்டும் என கூறப்பட்டது. எனவே, இவர் தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு ஒரு ஆண்டு காலம் வரக்கூடாது. நீதிமன்ற, போலீஸ் விசாரணைக்கு மட்டுமே தட்சிண கன்னடாவுக்குள் வர அனுமதிக்கபடுவார். மற்றபடி மாவட்டத்திற்குள் வர அனுமதிக்கப்பட மாட்டார். அவரை ராய்ச்சூர் மாவட்டத்திற்கு இடம்பெயர உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.