உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அமைதியான சூழ்நிலையை ரசிக்க மஜல்லி பீச்

அமைதியான சூழ்நிலையை ரசிக்க மஜல்லி பீச்

உத்தர கன்னடா மாவட்டம், கார்வாரில் அமைதியான சூழ்நிலை பின்னணி கொண்ட மஜல்லி கிராமத்தில் அமைந்துள்ளது மஜல்லி கடற்கரை. 4.5 கி.மீ., நீளமுள்ள இந்த கடற்கரை, தேவ்பாக் கடற்கரைக்கு வடக்கே அமைந்துள்ளது. மஜல்லி கடற்கரையில் சுத்தமான மணல் நிறைந்து காணப்படுகிறது. வார இறுதியை அமைதியான சூழ்நிலையில் கொண்டாட ஏற்ற இடம். இங்கிருந்து 5 முதல் 8 கி.மீ., தொலைவில் கார்வார் நகரம் அமைந்துள்ளது. கடற்கரை, பிரதான சாலையில் இருந்து சில கி.மீ., தொலைவில் அமைந்துள்ளதால், தனியார் வாகனங்களில் செல்வது நல்லது. அவ்வாறு செல்லும் வழியில், இடதுபுறத்தில் ராமர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய விரும்பினால், தரிசித்துவிட்டு, மீண்டும் கடற்கரையை நோக்கி நம் பயணத்தை தொடரலாம். கடற்கரையை ஒட்டி, சாலை செல்கிறது. கடலை ரசித்தபடி சைக்கிளிங் செய்யலாம். வெளி மாவட்ட மக்களுக்கு இத்தகைய கடற்கரை இருப்பது தெரியாததால், எப்போது சென்றாலும், மக்கள் நெரிசல் இல்லாமல், ஹாயாக பொழுதுபோக்கலாம். கடற்கரையில் இருந்து சிறிது தொலைவில் குட்டிக்குட்டி தீவுகள் உள்ளன. படகு சவாரியின்போது, இவற்றை சுற்றி வரலாம். இங்கு படகு சவாரி, மீன் பிடித்தல், கயாக்கிங், பெடலிங் போன்ற பொழுதுபோக்கு வசதிகளை தனியார் ரிசார்ட்கள் வழங்குகின்றன. கடலை நோக்கி ரிசார்ட்கள், மர வீடுகள், காட்டேஜ்கள் அமைந்துள்ளன. இந்த கடற்கரையில் இருந்து டில்மட்டி கடற்கரைக்கு படகுகள் இயக்கப்படுகின்றன. இக்கடற்கரைக்கு செல்லும் வழியில், கருப்பு நிற மணல், குட்டி தீவுகள், துள்ளி குதிக்கும் டால்பின்களை காணலாம். மாலை நேரத்தில் சூரிய அஸ்தன காட்சி, ரம்மியமாக இருக்கும். எப்படி செல்வது? - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ