உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / திருமணத்துக்கு மறுத்த காதலி கத்தியால் குத்தியவர் கைது

திருமணத்துக்கு மறுத்த காதலி கத்தியால் குத்தியவர் கைது

விஜயநகரா : ஆந்திராவை சேர்ந்தவர் பாரதி சாவி, 26. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, குடும்பத்துடன் விஜயநகரா மாவட்டத்தில் குடியேறினார். முகநுால் மூலம் ஆந்திராவை சேர்ந்த விஜயபாஸ்கர், 26, என்பவரின் அறிமுகம் கிடைத்தது.நாளடைவில் இருவரும் காதலிக்க துவங்கி உள்ளனர். பாரதிசாவி, ஆந்திராவுக்கு செல்லும் போதெல்லாம், விஜயபாஸ்கரை சந்தித்து வந்துள்ளார்.கடந்த சில மாதங்களாக, விஜயபாஸ்கரிடம் மொபைல் போனில் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். நேற்று காலை பணிக்கு சென்று கொண்டிருந்த பாரதி சாவியை ஹொஸ்பேட் நகராட்சி அலுவலகம் முன் விஜய பாஸ்கர் வழிமறித்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, அவர் வற்புறுத்தினார்.பாரதிசாவி மறுத்துவிட்டார். கோபம் அடைந்த விஜயபாஸ்கர், தான் வைத்திருந்த கத்தியால் அவரை குத்தினார். அவர் கூச்சல் போட்டதால், சத்தம் கேட்ட அப்பகுதியினர், விஜய்பாஸ்கரை மடக்கிப் பிடித்தனர்.படுகாயம் அடைந்த பாரதிசாவியை, மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதற்கிடையில் தகவல் அறிந்த ஹொஸ்பேட் டவுன் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, விஜயபாஸ்கரை கைது செய்து விசாரிக்கின்றனர்.பாரதிசாவி தாய் ருக்மிணி கூறுகையில், ''எங்கள் பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. விஜய்பாஸ்கரை பிடிக்கவில்லை என்று அவரிடம் கூறிவிட்டோம். ஆனாலும், என் மகளை தொந்தரவு செய்து வந்தார். நேற்று என் மகள் பணிக்கு செல்லும்போது அவரை கத்தியால் குத்தி உள்ளார்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ