மனநலம் பாதித்த சிறுமி பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டு சிறை
கதக் : மனநலம் சரியில்லாத சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கதக் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.கதக் மாவட்டத்தின் சிரஹட்டியில் வசிக்கும் 17 வயது சிறுமி, மனநிலை சரியில்லாதவர். இவரை இதே பகுதியில் வசிக்கும் சித்தப்ப பரசப்பா மாகடி, 38, ஏமாற்றி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தார்.பல நாட்கள் இது போன்று செய்துள்ளார். இதை யாரிடமாவது கூறினால் கொலை செய்வதாக மிரட்டினார்.சிறுமி கர்ப்பமடைந்த பின், குடும்பத்தினருக்கு தெரிந்தது. இது குறித்து, சிரஹட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார், சித்தப்ப பரசப்பா மாகடியை கைது செய்தனர். சில நாட்களுக்கு முன்பு, சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.விசாரணையை முடித்த போலீசார், கதக் கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையில் சித்தப்ப பரசப்பா மாகடியின் குற்றம் உறுதியானதால், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ராஜேஸ்வரி ஷெட்டி நேற்று தீர்ப்பளித்தார்.அபராத தொகையை செலுத்த தவறினால், கூடுதலாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென, நீதிபதி உத்தரவிட்டார்.