மேலும் செய்திகள்
சிறுமி பலாத்கார வழக்கு அரசு ஊழியருக்கு சிறை
27-Mar-2025
பீதர்: சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு, 35 ஆண்டு சிறை தண்டனை விதித்து, பீதர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.பீதர் நகரின், ஜனவாடா கிராமத்தில் வசித்து வரும் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜு மானப்ப ஜளகவாளா, 25, கைது செய்யப்பட்டார். கடந்த 2023ல் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக இவர் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் ஜனவாடா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பீதர் நகரின் கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையில் ராஜு மானப்ப ஜளகவாளாவின் குற்றம் உறுதியானது.இவருக்கு 35 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, 50,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி சச்சின் கவுஷிக் நேற்று தீர்ப்பளித்தார். அபராதம் செலுத்த தவறினால், கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்.
27-Mar-2025