20 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்
மங்களூரு: மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சுதீர்குமார் ரெட்டி, நேற்று அளித்த பேட்டி: மங்களூரில் பொளலி அனந்துவின் சவ ஊர்வலத்தில், 2005ல் நடந்த மத கலவரம் தொடர்பாக, மனோஜ், 44, என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் நடந்த விசாரணையில் அவர் ஆஜராகவில்லை. வெளிநாடு தப்பி சென்ற அவர் ஊருக்கு திரும்பிய பின் தலைமறைவானார், இவர் நேற்று உடுப்பி, கார்கலின், கவுடூர் கிராமத்தில் கைது செய்யப்பட்டார்.