மேலும் செய்திகள்
தலைமை செயலர்கள் ஆஜராக உத்தரவு
21-Jun-2025
பெங்களூரு: மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சர்வேஷ். பவர் பெல் பேட்டரி இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரை, அந்நிறுவனம் பணியில் இருந்து நீக்கியது. இது தொடர்பாக, மைசூரு தொழிலாளர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், சர்வேஷுக்கு வழங்க வேண்டியிருந்த சம்பளம், 75 சதவீத தொகையை வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், 50 சதவீத தொகையை வழங்கும்படி உத்தரவிட்டது.அப்போது நீதிமன்றத்தில் இருந்த சர்வேஷ், தொழிலாளர் நீதிமன்றம், நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள், வக்கீல்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.இதையடுத்து, தொழிலாளர் நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு இரண்டு கடிதங்களை எழுதி, சர்வேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என, 2022ல் கேட்டுக் கொண்டது.இதன்படி, உயர் நீதிமன்றத்தில் நடந்த அவமதிப்பு வழக்கில், நீதிமன்ற நடைமுறைகள் தெரியாத சர்வேஷுக்கு உதவும் வகையில், உதவியாளரை நீதிமன்றம் அமர்த்தியது. 'அதை வேண்டாம்' என அவர் கூறிவிட்டார்.இம்மனு நீதிபதிகள் முத்கல், விஜய்குமார் பாட்டீல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அவர்கள் தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளதாவது:வக்கீல்களின் வாதத்தை கேட்ட பின், குற்றம் சாட்டப்பட்ட நபர், நீதிபதிகள் மீது குற்றச்சாட்டு கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது தெரிகிறது. நீதிமன்றத்தின் கண்ணியத்தை குறைக்க முயற்சிக்கிறார்; நீதித்துறை செயல்பாட்டில் தலையிடுகிறார்; நீதி நிர்வாகத்தை தடுக்கிறார். அவர் கூறிய கருத்துக்கு, வருத்தமும் தெரிவிக்கவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பை குறிக்கிறது. எனவே அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபாரத தொகையை செலுத்த தவறினால், அதற்கான சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
21-Jun-2025