உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  அடுத்தவர் வீட்டிற்குள் அத்துமீறி உரிமையாளரை கொன்றவருக்கு 4 ஆண்டு

 அடுத்தவர் வீட்டிற்குள் அத்துமீறி உரிமையாளரை கொன்றவருக்கு 4 ஆண்டு

ஷிவமொக்கா: மற்றொருவரின் வீட்டில் அத்துமீறி நுழைந்து, மொபைல் போனிற்கு சார்ஜ் போட்டதுடன், அவரை அடித்து கொலை செய்தவருக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்து, சாகரா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஷிவமொக்கா மாவட்டம், சாகரா தாலுகாவின் மூருள்ளி மாருதி கிராமத்தில் வசித்தவர் திம்மப்பா, 35. கடந்த, 2022 நவம்பர் 7ம் தேதி, இவரது வீட்டுக்குள் அதே கிராமத்தைச் சேர்ந்த சித்தப்பா, 45, என்பவர் அத்துமீறி நுழைந்தார். தன் மொபைல் போனுக்கு சார்ஜ் போட்டார். இதுகுறித்து, திம்மப்பாவும், அவரது மனைவி லட்சுமியும் கேள்வி எழுப்பினர்; வெளியே செல்லும்படி கூறினர். கோபமடைந்த சித்தப்பா, அங்கிருந்த உருட்டுக் கட்டையை எடுத்து, திம்மப்பாவை கண் மூடித்தனமாக தாக்கினார். பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி, நவம்பர் 11ல் உயிரிழந்தார். இதுகுறித்து, சாகராவின் கார்கல் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகி, சித்தப்பாவை போலீசார் கைது செய்தனர். சாகராவின் 5வது கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. சித்தப்பாவின் குற்றம் உறுதியானதால், அவருக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை, 13,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ரவீந்திரா நேற்று தீர்ப்பளித்தார். அபராதத்தை செலுத்த தவறினால், கூடுதலாக ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்