உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வீடுகளுக்கு கட்டாய ஸ்மார்ட் மீட்டர் மாநில அரசு, பெஸ்காமுக்கு நோட்டீஸ்

வீடுகளுக்கு கட்டாய ஸ்மார்ட் மீட்டர் மாநில அரசு, பெஸ்காமுக்கு நோட்டீஸ்

பெங்களூரு: வீடுகளுக்கு கட்டாய ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் முடிவு குறித்து விளக்கம் அளிக்கும்படி, மாநில அரசு, பெஸ்காம் மின் வினியோக நிறுவனத்துக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.வீடுகளுக்கு கட்டாயமாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்த வேண்டும் என்ற பெஸ்காம், மாநில அரசின் முடிவை எதிர்த்து, மத்திகெரேயின் ஜெயபால், கர்நாடக வித்யூத் சேனாவின் முனுசுவாமி கவுடா உட்பட பலர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இம்மனு, நேற்று பொறுப்பு தலைமை நீதிபதி காமேஸ்வர் ராவ், நீதிபதி ஜோஷி ஆகிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.பெஸ்காம் தரப்பு வக்கீல் உதய் ஹொல்லா வாதிடுகையில், ''ஸ்மார்ட் மீட்டர், புதிதாக வீடு கட்டுவோருக்கு மட்டுமே தவிர, இப்போது வாடிக்கையாளர்களாக இருப்பவர்களுக்கு அல்ல,'' என்றார்.மனுதாரர் தரப்பு வக்கீல் லட்சுமி அய்யங்கார் வாதிடுகையில், ''அனைத்து வாடிக்கையாளர்களும் புதிய ஸ்மார்ட் மீட்டர் வாங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். மற்ற மாநிலங்களில் ஸ்மார்ட் மீட்டர் விலை 900 ரூபாய் உள்ளது. ஆனால் கர்நாடகாவில் அதிகமாக உள்ளது. மத்திய அரசின் ஆர்.டி.எஸ்.எஸ்., திட்டத்தை செயல்படுத்தாமல், டெண்டர் கோரி உள்ளனர்.''கே.இ.ஆர்.சி., எனும் கர்நாடக மின் ஒழுங்குமுறை கமிஷன், ஸ்மார்ட் மீட்டரை தேவையானால் பொருத்திக் கொள்ளலாம் என்று பரிந்துரைத்து உள்ளது. அரசின் விதிமுறைப்படி, ஒவ்வொருவரும் ஸ்மார்ட் மீட்டர் வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளது. கூடுதலாக ஸ்மார்ட் மீட்டரை பராமரிக்கும் செலவு இருப்பதாக குறிப்பிட்டு உள்ளது,'' என்றார்.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், 'மனுதாரரின் கேள்விக்கு நான்கு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும். இது தொடர்பாக மாநில அரசு, பெஸ்காமுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை