உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 8 வயதில் கராத்தேயில் கருப்பு பெல்ட் வாங்கிய மனிஷா

8 வயதில் கராத்தேயில் கருப்பு பெல்ட் வாங்கிய மனிஷா

ஹாவேரி மாவட்டம், பைத்தி நகரை சேர்ந்தவர் மனிஷா எம்.கபூர். இவர் தன் 4 வயதில் கராத்தே பயிற்சியில் ஈடுபட்டார். சிறு வயதிலே கடினமான பயிற்சிகள் செய்து, தன் 8 வயதிலேயே 'ஜூனியர் பிரிவுக்கான கருப்பு பெல்ட்'டை வாங்கினார். இதையடுத்து, உடல்நல பிரச்னைகள் காரணமாக, கராத்தே பயிற்சியில் இருந்து விலகினார். ஏழாம் வகுப்பு படிக்கும் போது, மீண்டும் கராத்தே பயிற்சியில் இணைந்தார். பிளாக் பெல்ட் பள்ளி, கல்லுாரி படிப்பின் போது, கராத்தேவில் ஆர்வம் காட்டினார். இரண்டாம் டிகிரி பிளாக் பெல்ட் பெற முயன்ற போது, முதலில் தோல்வி அடைந்தார். இதை ஒரு சவாலாக எடுத்து கொண்டு, கராத்தேவில் இரண்டாம் டிகிரி பிளாக் பெல்ட் பெற்றார். பின்னர், மூன்றாம் டிகிரி பிளாக் பெல்டுக்காக ஜப்பான் சென்று பெற்றார். அவ்வப்போது மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களையும் பெற்றார். போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் பெறுவதை விட, உடல் நலத்துக்கு ஆரோக்கியம் அளிக்கும் கராத்தே பயிற்சிகளில் ஆர்வம் காட்டினார். யோகாவிலும் முதுகலை பட்டம் பெற்றார். மனிஷா கற்ற வித்தைகளை, மற்றவர்களுக்கு கற்று கொடுக்க நினைத்தார். 2017ல் பயிற்சியாளராக புது உருவம் பெற்றார். தேர்ச்சி இவர் ஆண்டுக்கு 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இவரிடம் பயிற்சி பெற்ற பல மாணவர்கள் மாநில, தேசிய அளவில் பதக்கங்களை வாங்கி உள்ளனர். பல தனியார், அரசு பள்ளிகளில் பயிற்சியாளராக உள்ளார். இவர், துபாயில் நடந்த உலக கராத்தே கூட்டமைப்பு கராத்தே பயிற்சி தேர்வில் தேர்ச்சி அடைந்தார். மனிஷா கூறுகையில், ''ஹாவேரி மாவட்டத்தை கராத்தேவில் தலை சிறந்த மாவட்டமாக மாற்றுவதை குறிக்கோளாக வைத்து உள்ளேன். இதற்காக, என்னிடம் பயிற்சி பெறும் மாணவ - மாணவியரை தயார்படுத்தி வருகிறேன். என் மாணவர்கள் எதிர்காலத்தில் ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் பெற வேண்டும் என்பதே எனது லட்சியம், ஆசையாக உள்ளது,'' என்றார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை