உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மஞ்சுநாதர் தண்டிப்பார் தேவகவுடா ஆவேசம்

மஞ்சுநாதர் தண்டிப்பார் தேவகவுடா ஆவேசம்

பெங்களூரு : ''தர்மஸ்தலா மஞ்சுநாதர் மிகவும் சக்தி வாய்ந்தவர். அவரின் பெயரை சொல்லி தவறான தகவல்களை பரப்புவர்கள், எதிர்காலத்தில் அதற்கான தண்டனையை அனுபவிப்பர்,'' என, முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்தார். பெங்களூரில் நேற்று தனது வீட்டில், முன்னாள் பிரதமர் தேவகவுடா, தனது மனைவி சென்னம்மாவுடன் கவுரி கணேச சதுர்த்தி கொண்டாடினார். பின், அவர் அளித்த பேட்டி: தர்மஸ்தலா மஞ்சுநாதர் மிகவும் சக்தி வாய்ந்தவர். அவரின் பெயரை சொல்லி தவறான தகவல்களை பரப்புவர்கள், எதிர்காலத்தில் அதற்கான தண்டனையை அனுபவிப்பர். இவ்விஷயத்தில் ஏற்றம், இறக்கம் என்பது தற்காலிகம் தான். கடவுளின் ஆசிர்வாதத்துடன் இறுதி முடிவு வெளியாகும். மஞ்சுநாதரின் அதிகாரத்தை யாராலும் குறைக்க முடியாது. பொய் தகவல் பரப்புவோர், எதிர்காலத்தில் மிகவும் கஷ்டப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை