உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  வேண்டினால் மழ ை பெய்விக்கும் மெதிகான்குட்டா

 வேண்டினால் மழ ை பெய்விக்கும் மெதிகான்குட்டா

ஹிந்து மதத்தில் விநாயகர் கடவுளுக்கு சிறப்பு இடம் உள்ளது. முழு முதற் கடவுளாக போற்றப்படுகிறார். எந்த வேலை என்றாலும், விநாயகரை வழிபட்ட பின்னரே துவங்குவது வழக்கம். அவ்வாறு செய்தால், நினைத்த காரியம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஒவ்வொரு பகுதியிலும் விநாயகர் கோவிலை காணலாம். சிக்கமகளூரு மாவட்டம் கலசா தாலுகாவின் மெதிகான் குட்டாவில் குடிகொண்டுள்ள விநாயகர் மிகவும் சிறப்பானவர். மலை மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பக்தர்களுக்கு வேண்டிய வரம் அளிக்கிறார். மழை பெய்யாவிட்டால் இங்கு வந்து வேண்டினால் போதும்; மழை பெய்யும். அதிகமான மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மழையை நிறுத்தி, 'காப்பாற்று விநாயக பெருமானே' என, வேண்டினால் உடனடியாக மழை நிற்கும் என்பது ஐதீகம். மழை மட்டுமல்ல, தன்னை தேடி வந்து பக்தியுடன் பிரார்த்தனை செய்தால் வேண்டிய வரங்களை அள்ளித்தரும் வள்ளல். 75 ஆண்டுகளாக மெதிகான் குட்டா மலையில் கார்த்திகை தீபம், மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி விநாயகரை தரிசிப்பர். கொழுக்கட்டை, ரவா லட்டு, சுண்டல் என பல்வேறு பிரசாதங்களை தயாரித்து கொண்டு சென்று, விநாயகருக்கு படைப்பது உண்டு. கோவிலில் மற்றொரு சிறப்பும் உள்ளது. மழையை தருவதால் மழைக்கடவுள் என்றும் சுற்றுப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். இக்கோவில் புராண பிரசித்தி பெற்றதாகும். பல நுாறு ஆண்டுகள் பழமையானது - நமது நிருபர் - .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை