உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  விபத்தில் மருத்துவ மாணவி பலி

 விபத்தில் மருத்துவ மாணவி பலி

ஆர்.ஆர்.நகர்: ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் மருத்துவ மாணவி உயிரிழந்தார். பெங்களூரு ஆர்.ஆர்.நகர் பி.இ.எம்.எல்., லே - அவுட்டில் வசித்தவர் கிருத்திகா, 22. எம்.பி.பி.எஸ்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை தன் தோழி ஹன்சா, 22 உடன், ஸ்கூட்டரில் சென்றார். பெங்களூரில் இருந்து மைசூரு நோக்கி சென்ற லாரி ஸ்கூட்டர் மீது மோதியது. பின்னால் அமர்ந்திருந்த கிருத்திகா சாலையில் விழுந்தார். அவர் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே இறந்தார். ஹன்சா படுகாயம் அடைந்தார். லாரி டிரைவர் சஞ்சீவ் சவுத்ரி, 35, என்பவரை, கெங்கேரி போக்குவரத்து போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ