உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / டிசம்பருக்குள் கூடுதல் ரயில் மெட்ரோ நிர்வாகம் உறுதி

டிசம்பருக்குள் கூடுதல் ரயில் மெட்ரோ நிர்வாகம் உறுதி

பெங்களூரு: 'நடப்பாண்டின் இறுதிக்குள் பெங்களூரு மெட்ரோ ரயில் மஞ்சள் வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்' என, நம்ம மெட்ரோ அதிகாரிகள் கூறியுள்ளனர். பெங்களூரு ஆர்.வி., ரோடு முதல் பொம்மசந்திரா வரையிலான மெட்ரோ மஞ்சள் பாதையில் ரயில் சேவை கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி துவங்கியது. இதில், நான்கு ரயில்கள் 19 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகின்றன. 5வது ரயில், ஹெப்பகோடி பணிமனையில் சோதனையில் உள்ளது. இதுகுறித்து நம்ம மெட்ரோ நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ஐந்தாவது ரயில், அடுத்த மாதத்திற்குள் இயக்கத்திற்கு வரும். இதன் மூலம் 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். ஆறாவது ரயிலுக்கான பெட்டிகள் சீனாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ளன. டிசம்பருக்குள் ஆறாவது ரயிலும் இயக்கத்திற்கு வரும். இதன் மூலம் மஞ்சள் பாதையில் 12 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். இதனால், பயணியர் காத்திருக்கும் நேரம் வெகுவாக குறையும். வார இறுதி நாட்களில் 80,000க்கும் மேற்பட்ட பயணியர் மஞ்சள் பாதையை பயன்படுத்துகின்றனர். ரயில்களின் தேவை அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை