நாளை 2 மணி நேரம் மெட்ரோ ரயில் இயங்காது
பெங்களூரு: நாளை காலை 7:00 முதல் 9:00 மணி வரை, எம்.ஜி., சாலை - பையப்பனஹள்ளிக்கு இடையே மெட்ரோ ரயில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.பெங்களூரு நம்ம மெட்ரோ நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:நாளை டிரினிட்டி வட்டம், ஹலசூரு மெட்ரோ நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், ஊதா நிறப்பாதையில் எம்.ஜி., சாலை மற்றும் பையப்பனஹள்ளிக்கு இடையே மெட்ரோ ரயில் சேவை காலை 7:00 மணி முதல் காலை 9:00 மணி வரை இருக்காது.அதே சமயம், ஊதா நிறப்பாதையில் உள்ள மற்ற அனைத்து நிலையங்களிலும் வழக்கம் போல மெட்ரோ ரயில்கள் இயங்கும். மற்ற வழித்தடங்களிலும் ரயில்கள் வழக்கம் போல இயங்கும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.