உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  புத்தாண்டில் மெட்ரோ சேவை நீட்டிப்பு எம்.ஜி., ரோடு ரயில் நிலையம் மூடல்

 புத்தாண்டில் மெட்ரோ சேவை நீட்டிப்பு எம்.ஜி., ரோடு ரயில் நிலையம் மூடல்

பெங்களூரு: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதே சமயம், கூட்டநெரிசல் ஏற்படக் கூடாது என்பதற்காக எம்.ஜி., ரோடு மெட்ரோ நிலையம் நாளை இரவு 10:00 மணிக்கு மூடப்படுகிறது. பெங்களூரு மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளது. நாளை இரவு 11:00 மணிக்கு மேலும் ரயில்கள் இயக்கப்படும். அதுபோல புத்தாண்டு அன்று அதிகாலையிலும் ரயில்கள் இயக்கப்படும். ஊதா வழித்தடத்தில் ஒயிட்பீல்டு - செல்லகட்டா வரை இறுதி ரயில் ஜன., 1 அன்று அதிகாலை 1:45 மணிக்கும்; செல்லகட்டா - ஒயிட்பீல்டு வரை இறுதி ரயில் அதிகாலை 2:00 மணிக்கும் இயக்கப்படும். பச்சை வழித்தடத்தில் மாதவாரா - சில்க் போர்டு வரை இறுதி ரயில் ஜன., 1 அதிகாலை 2:00 மணிக்கும்; சில்க் போர்டு - மாதவாரா வரை இறுதி ரயில் அதிகாலை 2:00 மணிக்கும் இயக்கப்படும். மஞ்சள் வழித்தடத்தில் ஆர்.வி., ரோடு - பொம்மசந்திரா வரை இறுதி ரயில் ஜன., 1 அதிகாலை 3:10 மணிக்கும்; பொம்மசந்திரா - ஆர்.வி., ரோடு வரை இறுதி ரயில் அதிகாலை 1:30 மணிக்கும் இயக்கப்படும். இதுபோல மெஜஸ்டிக்கில் இருந்து ஒயிட்பீல்டு, செல்லகட்டா, மாதவாரா சில்க் போர்டு ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் இறுதி ரயில் ஜன., 1 அதிகாலை 2:45 மணிக்கு புறப்படும். ஊதா, பச்சை வழித்தடங்களில் ரயில்கள் 8 நிமிட இடைவெளியிலும், மஞ்சள் வழித்தடத்தில் 15 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும். கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதால் எம்.ஜி., ரோடு மெட்ரோ நிலையம் நாளை இரவு 10:00 மணிக்கு மூடப்படும். பயணியர் கப்பன் பார்க், டிரினிட்டி மெட்ரோ நிலையங்களில் பயணம் செய்ய அறிவுறுத்தப்படுவர். கப்பன் பார்க், டிரினிட்டி மெட்ரோ நிலையங்களில் நாளை இரவு 11:00 மணிக்கு மேல் கவுன்டரில் டிக்கெட் விற்பனை நிறுத்தப்படும். டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் பயணியர் நிற்கக்கூடும் என்பதால் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால், டிக்கெட் விற்பனை நிறுத்தப்படும். எனவே, பயணியர் முன்கூட்டியே, 'ரிட்டர்ன்' டிக்கெட் வாங்கி வைத்து கொள்ள வேண்டும் அல்லது 'ஆன்லைனில்' வாங்கி கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை