மேலும் செய்திகள்
ஹரியானாவில் விரைவில் நந்தினி உற்பத்திகள்
29-Mar-2025
பெங்களூரு: பொதுவாக கோடைக்காலத்தில், கே.எம்.எப்.,பில் பால் உற்பத்தி 80 லட்சம் லிட்டர் வரை இருக்கும். கடந்தாண்டு 80.50 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியானது. நடப்பாண்டு தினமும் சராசரியாக 87.63 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. இம்மாதம் 23ல் ஒரே நாளில் 91.73 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியானது.வரும் நாட்களில் இந்த அளவு, 1.25 கோடி லிட்டரை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பொதுவாக கோடைக்காலத்தில், பசுக்களுக்கு பசுமையான தீவனம் கிடைக்காதது, வெப்பத்தின் தாக்கம் போன்ற காரணங்களால், பால் உற்பத்தி குறையும்.விவசாயிகள், பண்ணைகளுக்கு வினியோகிக்கும் பாலின் அளவும் குறையும். ஆனால் இம்முறை பால் உற்பத்தி, ஒன்பது முதல் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.பாலை விற்பனை செய்வது, கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு பெரும் சவாலாக இருக்கும். விரிவாக்கம்
இதனால், நாட்டின் பல்வேறு மாநிலங்களில், 'நந்தினி' உற்பத்தி பொருட்கள் விற்பனையை, கே.எம்.எப்., விரிவுபடுத்த, ஆர்வம் அதிகரித்து உள்ளது. இது குறித்து, கே.எம்.எப்., அதிகாரிகள் கூறியதாவது:கர்நாடகாவில் கே.எம்.எப்., கட்டுப்பாட்டில், 16 மாவட்ட பால் கூட்டுறவு சங்கங்களும், 15,840 பண்ணைகளும் உள்ளன. 26.89 லட்சம் விவசாயிகள் பால் வினியோகிக்கின்றனர்.பொதுவாக கோடைக்காலத்தில், பால் உற்பத்தி 80 லட்சம் லிட்டர் வரை இருக்கும். கடந்தாண்டு 80.50 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியானது. ஆனால் நடப்பாண்டு தினமும் சராசரியாக 87.63 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. இம்மாதம் 23ல் ஒரே நாளில் 91.73 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியானது. ஒப்பீடு
சாம்ராஜ்நகர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், கடந்தாண்டு கோடைக்காலத்தில் தினமும் 2.30 லட்சம் லிட்டர் பாலும், நடப்பாண்டு 2.44 லட்சம் லிட்டரும்; பல்லாரி மாவட்டத்தில், கடந்தாண்டு 1.60 லட்சம் லிட்டரும், இம்முறை 1.91 லட்சம் லிட்டரும்; பெலகாவி கூட்டுறவு சங்கத்தில், கடந்தாண்டு 1.80 லட்சம் லிட்டரும், நடப்பாண்டு 2.11 லட்சம் லிட்டர் பாலும் உற்பத்தியாகிறது.இம்முறை மாநிலத்தின் பல மாவட்டங்களில், கோடை மழை அதிக அளவில் பெய்துள்ளது. பிப்ரவரியில் இருந்தே, ஆங்காங்கே மழை பெய்கிறது.மார்ச்சில், 13 மாவட்டங்களில் வழக்கத்தை விட, கூடுதல் மழை பெய்துள்ளது. சூழ்நிலை பசுக்களுக்கு ஏற்றதாக உள்ளது. எனவே இம்முறை கோடைக்காலத்திலும், பால் உற்பத்தி அளவு குறையவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.ஏப்ரல் 1 ம் தேதி முதல், பால் கொள் முதல் விலை, நான்கு ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் கே.எம்.எப்.,புக்கு வரும் பால் அளவு அதிகரித்துள்ளது. மாநிலத்தில் மழை பெய்வதும் ஒரு முக்கிய காரணமாகும். இதுபோன்று மழை நீடித்தால், வரும் நாட்களில் பால் உற்பத்தி அளவு 1.25 கோடி லிட்டரை தாண்டும் என, எதிர்பார்க்கிறோம்.- பீமா நாயக், தலைவர், கே.எம்.எப்.,
29-Mar-2025