உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெட்ரோல் பங்கில் நுழைந்த மினி டிரக்

பெட்ரோல் பங்கில் நுழைந்த மினி டிரக்

பெங்களூரு : ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி டிரக், பெட்ரோல் பங்க்கில் புகுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூரின், சாம்ராஜ்பேட் பிரதான சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது. நேற்று காலை சாலையில் சென்று கொண்டிருந்த மினி டிரக், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பெட்ரோல் பங்கிற்குள் புகுந்து, கழிப்பறை மீது மோதி நின்றது. இந்த விபத்தில் கழிப்பறை இடிந்து விழுந்தது. விபத்தால், அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.டிரக்கில் சமையல் எண்ணெய் ஏற்றிச் செல்லப்பட்டது. எண்ணெய் இருந்ததால், சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது. தகவலறிந்து அங்கு வந்த போலீசார், டிரக் ஓட்டுநரிடம் விபத்து குறித்து விசாரித்தனர். டிரக்கை அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி