உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மேகதாது அணை திட்டம் விரைவுபடுத்த அமைச்சர் உத்தரவு

 மேகதாது அணை திட்டம் விரைவுபடுத்த அமைச்சர் உத்தரவு

பெங்களூரு: ''மேகதாது அணை திட்ட பணியை விரைவுபடுத்துங்கள்,'' என்று, நீர்பாசன துறை அதிகாரிகளுக்கு, அமைச்சர் செலுவராயசாமி அதிரடி உத்தரவிட்டுள்ளார். நீர்ப்பாசன துறையின் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள செலுவராயசாமி, நீர்ப்பாசன துறை அதிகாரிகளுடன் பெங்களூரில் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: பெங்களூரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு, நிரந்தர குடிநீரை வழங்குவதில் மேகதாது அணை திட்டம் முக்கிய பங்கு வகிக்கும். திட்டம் தொடர்பாக எந்த விஷயத்திலும் தாமதமின்றி தேவையான நடவடிக்கைகளை எடுங்கள். மேகதாது திட்ட பணியை விரைவுபடுத்துங்கள். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை