அமைச்சர் முனியப்பா அதிருப்தி
பெங்களூரு: ''தலித் முதல்வராவதற்கான காலம் இன்னும் வரவில்லை,'' என, மாநில உணவு பொது வினியோகத் துறை அமைச்சர் முனியப்பா தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:மாநில தலைவர் மாற்றம் உட்பட அனைத்து விஷயங்கள் குறித்தும் கட்சி மேலிடம் முடிவெடுக்கும்.தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் முதல்வராக வேண்டும் என்று கோரிக்கை உள்ளது. சித்தராமையா முதல்வராக இருப்பதால், அது பற்றி பேசுவது சரியல்ல.சமூகம், கல்வி, பொருளாதாரம் என அனைத்து விஷயத்திலும் அனைவருக்கும் சமமான பங்கு கிடைக்க காங்கிரஸ் உறுதிபூண்டுள்ளது.தரம்சிங் முதல்வராக இருந்தபோது, தனக்கு பின், மல்லிகார்ஜுன கார்கே முதல்வராக வேண்டும் என்று விரும்பினார். தேர்தலில் மாநிலத் தலைவராக இருந்த பரமேஸ்வர் தோல்வி அடைந்தபோதும், துணை முதல்வராக்கியவர் சித்தராமையா தான்.இவ்வாறு அவர் கூறினார்.