உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நோயாளிகளை அலைய வைக்காதீர்கள் கித்வாய் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

நோயாளிகளை அலைய வைக்காதீர்கள் கித்வாய் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

பெங்களூரு : ''கித்வாய் புற்றுநோய் மருத்துவமனையில் பதிவு செய்த உடனேயே, உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்,'' என, மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் தெரிவித்தார்.பெங்களூரின், கித்வாய் புற்றுநோய் மருத்துவமனையில், அமைச்சர் சரண பிரகாஷ், நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்குள்ள வசதிகளை பார்வையிட்டார். மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அமைச்சர் பேசியதாவது:நோயாளிகளை அலைய வைக்கக் கூடாது. சிகிச்சைக்கு வந்து பதிவு செய்து கொண்டவுடன், மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சேர்த்துக் கொள்ள வேண்டும்; தாமதம் செய்ய கூடாது. மருத்துவமனையில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகம் உள்ளது. ஆனால் மருத்துவமனையின் 70 சதவீதத்துக்கும் குறைவான படுக்கைகள் மட்டும் நிரம்பியது ஏன்?புற்றுநோயை உறுதி செய்து, அறிக்கை வரும் வரை காத்திருக்கக் கூடாது. மருத்துவமனை நிர்வாகம் தன் விதிகளை மாற்றிக் கொண்டு, நோயாளிகள் பதிவு செய்து கொண்டவுடன், வார்டுகளில் தங்கவைக்க வேண்டும்.பல நோயாளிகள் பொருளாதாரத்தில் பின் தங்கி இருப்பர். இவர்களால் பெங்களூரில் தங்கும் வசதி செய்து கொள்ள முடியாது. பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் வசிக்கும் நோயாளிகளுக்கு, தங்கும் வசதி தேவை இருக்காது. ஆனால் தொலை துாரத்தில் இருந்து வரும் நோயாளிகளுக்கு, தங்கும் வசதி அவசியம்.இறுதி அறிக்கைகள் கிடைக்க, ஒன்றிரண்டு நாட்கள் ஆகலாம். அதுவரை உள்நோயாளிகளாக இருக்க விரும்புவோருக்கு, ஒப்புதல் கடிதம் தாருங்கள். அறிக்கைக்காக காத்திருக்கும் நோயாளிகளுக்கு, இலவச தங்கும் வசதியுடன், உணவும் வழங்க வேண்டும். வார்டுகளில் படுக்கைகளில் தங்க வையுங்கள். ஒருவேளை படுக்கைகள் காலியாக இல்லை என்றால், தர்மசாலையில் தங்க வையுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ