உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / எத்தனால் மாதிரிகள் சோதிக்க அமைச்சர் ரிஸ்வான் கோரிக்கை

எத்தனால் மாதிரிகள் சோதிக்க அமைச்சர் ரிஸ்வான் கோரிக்கை

பெங்களூரு: ‘‘எத்தனால் விவகாரத்தில், சான்று பெற்ற தனியார் ஆய்வகங்கள் சோதனை நடத்த அனுமதிக்குமாறு, மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்படும்,’’ என உணவு பொது வினியோக துறை அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத் தெரிவித்தார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: பெட்ரோல் வினியோகிக்கும் நிறுவனங்களின் ஆய்வகங்களில் இருந்து வரும் சோதனை அறிக்கையை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. மூன்றாம் தரப்பு ஆய்வகங்களின் சோதனையை அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவோம். வாகன ஓட்டிகள் தினமும் பெட்ரோலை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தினரும் ஏழை மக்களும் இதை தீவிரமாக எடுத்துள்ளனர். கோடிக்கணக்கான மக்கள் தங்கள் உணர்வுகளையும், அனுபவங்களையும் பகிர்ந்துள்ளனர். கர்நாடக அரசின் நடவடிக்கையை மக்கள் பாராட்டுகின்றனர். பெட்ரோல் நிலையங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் குறித்து பெட்ரோல் விற்பனை நிறுவனங்கள், பெட்ரோல் விற்பனை நிலையத்தின் பிரதிநிதிகளிடம் கையொப்பம் பெற்றுள்ளோம். விதிகளை பின்பற்றியே ஆய்வுகள் நடத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை