உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சிறைத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் பிரியங்க் எச்சரிக்கை

 சிறைத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் பிரியங்க் எச்சரிக்கை

பெங்களூரு: ''சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் சிறைத்துறை அதிகாரிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார். நேற்று அவர் அளித்த பேட்டி: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சோதனை செய்ய உத்தரவிட்டேன். இச்சோதனையில் மொபைல் போன்கள் கண்டெடுக்கப்பட்டன. சிறையில் உள்ள கைதிகளுக்கு மொபைல் போன் எப்படி கிடைக்கிறது என்பது குறித்து விசாரிக்கப்படும். வரும் நாட்களில் பெங்களூரு மட்டுமின்றி மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து சிறைகளிலும் சோதனை நடக்கும். சிறையில் உள்ள கைதிகள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எக்காரணம் கொண்டும் வி.ஐ.பி., வசதி வழங்கப்படக்கூடாது. கைதிகளுடன் இணைந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் சிறைத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோத செயலில் ஈடுபடுவோர் ஏ.டி.ஜி.பி.,யாக இருந்தாலும், அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறையில் உள்ள மொபைல் போன் ஜாமரின் செயல்பாடுகள் குறித்து, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. கர்நாடக முழு அடைப்பால் எந்த பயனுமில்லை. மக்கள் நலனை பாதுகாப்பதே மாநில அரசின் நோக்கமாகும். பல துறைகளில் காலி பணியிடங்களுக்கான தேர்வு வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படுகிறது. சனிக்கிழமைகளில் தேர்வு நடத்துவது குறித்து கர்நாடக தேர்வு ஆணையத்திடம் பேச்சு நடக்கிறது. போலீஸ் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை