உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  அமித் ஷா மன்னிப்பு கேட்கணும் அமைச்சர் யதீந்திரா வலியுறுத்தல்

 அமித் ஷா மன்னிப்பு கேட்கணும் அமைச்சர் யதீந்திரா வலியுறுத்தல்

ஹூப்பள்ளி: ''டில்லி போராட்டத்தில் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என, நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் யதீந்திரா கூறினார். அவர் அளித்த பேட்டி: டில்லி போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது தடியடி நடத்த போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அனுமதி அளித்தார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்டால் தான் லோக்சபாவில் நடவடிக்கைகளை தொடர முடியும். இதுவே, காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. மாநிலத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படுவதை தடுக்க, காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. வறட்சி நிலை தொடர்ந்தால், வறட்சி நிலவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டால் தேசிய பேரிடர் நிவாரண நிதி, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !