உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மாநிலம் முழுதும் வெள்ளி விழா கொண்டாட்டங்கள் நடத்தும் ம.ஜ.த.,

மாநிலம் முழுதும் வெள்ளி விழா கொண்டாட்டங்கள் நடத்தும் ம.ஜ.த.,

பெங்களூரு: ம.ஜ.த., எனும் மதச்சார்பற்ற ஜனதா தளம் உதயமாகி, 25 ஆண்டுகள் நிறைவடைந்ததால், கர்நாடகா முழுவதும் வெள்ளி விழா கொண்டாட்டங்கள் நடத்த, கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. ம.ஜ.த., உதயமாகி, 25 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதை சிறப்பாக கொண்டாட கட்சி மேலிடம் திட்டம் வகுத்துள்ளது. வெள்ளி விழா கொண்டாட்டம் குறித்து, முக்கிய தலைவர்களுடன், கனரக தொழிற் துறை அமைச்சர் குமாரசாமி நேற்று முன் தினம், ஆலோசனை நடத்தினார். பெங்களூரின், சேஷாத்ரிபுரத்தில் உள்ள ம.ஜ.த., அலுவலகத்தில் நடந்த ஆலோசனையில் எம்.பி., மல்லேஷ் பாபு, எம்.எல்.ஏ.,க்கள் சுரேஷ் பாபு, மஞ்சு, பால கிருஷ்ணா, ஹரிஷ்கவுடா, ஸ்வரூப் பிரகாஷ் உட்பட, பலர் பங்கேற்றனர். அனைவரின் கருத்துகளை கேட்டறிந்த குமாரசாமி, 'மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும், ம.ஜ.த., வெள்ளி விழா கொண்டாட வேண்டும். இதற்கான முன்னேற்பாடுகளை செய்யுங்கள். 22ல் பெங்களூரில் தேசிய செயற்குழு கூட்டம் மற்றும் தேசிய மாநாடு நடத்தப்படும். மாநாட்டுக்கு தயாராகுங்கள்' என உத்தரவிட்டார். தேசிய செயற்குழு கூட்டம், தேசிய மாநாடு குறித்து தலைவர்களுக்கு குமாரசாமி, பொறுப்புகளை பகிர்ந்தளித்தார். 'இன்னும் இரண்டரை ஆண்டுகளில், சட்டசபை தேர்தல் வரும். அதற்கு இப்போதிருந்தே தயாராக வேண்டும். கட்சியை பலப்படுத்த, வெள்ளி விழா கொண்டாட்டம் உதவும். எனவே ஈடுபாட்டுடன் தயாராகுங்கள்' என, நிர்வாகிகளை அவர் அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை