உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  புதிய விருந்தினர் மாளிகைக்கு இடம் ஆய்வு செய்த எம்.எல்.ஏ.,

 புதிய விருந்தினர் மாளிகைக்கு இடம் ஆய்வு செய்த எம்.எல்.ஏ.,

தங்கவயல்: தங்கவயலில் புதிய வி.ஐ.பி., விருந்தினர் மாளிகை கட்டப்படவுள்ள இடத்தை, தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: தற்போது பொதுப் பணித்துறை விருந்தினர் மாளிகை வளாகத்தில் புதிய வி.ஐ.பி. விருந்தினர் மாளிகை கட்டப்பட உள்ளது. தற்போதுள்ள விருந்தினர் மாளிகை, 115 ஆண்டுகள் பழமையானது. இதனால், தங்கவயலில் அனைத்து வசதிகளும் கொண்ட நவீன விருந்தினர் மாளிகை ஒன்றை அமைப்பது அவசியமாக இருந்ததால், அதற்கான நிதி ஒதுக்கீடு கோரி அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அமைச்சர் .5 கோடியை ஒதுக்கி அனுமதியும் வழங்கியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை