உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / எம்.எல்.ஏ.,க்கள் குறைகளுக்கு தீர்வு: சித்து, சிவாவுக்கு சுர்ஜேவாலா அறிவுரை

எம்.எல்.ஏ.,க்கள் குறைகளுக்கு தீர்வு: சித்து, சிவாவுக்கு சுர்ஜேவாலா அறிவுரை

பெங்களூரு: 'காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் குறைகளுக்கு உடனடி தீர்வு காணுங்கள்' என, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாருக்கு, மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா அறிவுரை கூறியுள்ளார்.கர்நாடகாவில் ஆளுங்கட்சியாக உள்ள காங்கிரஸ் மீது, அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்களே குறை கூறினர். 'தொகுதிக்கு போதிய நிதி கிடைப்பது இல்லை; அமைச்சர்கள் தங்களை மதிப்பது இல்லை' என, பகிரங்கமாக குற்றம் சாட்டினர். இதனால் தேசிய அரசியலிலும் பரபரப்பு ஏற்பட்டது.குழப்பத்தை நீக்க மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, இரண்டு கட்டங்களாக பெங்களூரு வந்து, ஆறு நாட்கள் தங்கினார். முதல் முறை வந்தபோது எம்.எல்.ஏ.,க்களையும், இரண்டாவது முறை வந்தபோது அமைச்சர்களையும் தலா மூன்று நாட்கள் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டினர்.அமைச்சர்களை சந்தித்தபோது, 'இரண்டு ஆண்டுகளில் உங்கள் துறையில் செய்தது என்ன?' என, சுர்ஜேவாலா கேள்வி எழுப்பினார். எம்.எல்.ஏ.,க்களை அரவணைத்துச் செல்லும்படி அறிவுரை கூறினார்.அமைச்சர்கள் உடன் ஆலோசனை முடிந்த பின், நேற்று முன்தினம் இரவு சித்தராமையா, சிவகுமாருடன், சுர்ஜேவாலா தனியாக ஆலோசனை நடத்தினார். எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் கூறியது பற்றி எழுதி வைத்திருந்த குறிப்புகள் தொடர்பாக, இருவரிடமும் ஆலோசனை நடத்தினார்.அப்போது, 'எம்.எல்.ஏ.,க்களின் குறைகளுக்கு உடனடியாக தீர்வு காணுங்கள்' என, இருவருக்கும் அவர் அறிவுரை கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி