உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பல்லாரி மத்திய சிறையில் மொபைல் போன்கள் பறிமுதல்

 பல்லாரி மத்திய சிறையில் மொபைல் போன்கள் பறிமுதல்

பல்லாரி: பல்லாரி மத்திய சிறையில் சிறைத்துறை டி.ஜி.பி., அலோக் குமார் ஆய்வு செய்தார். கைதிகளிடம் இருந்து 10 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. க ர்நாடகாவின் சிறைத்துறை டி.ஜி.பி., அலோக் குமார், இம்மாதம் துவக்கத்தில் பதவியேற்றார். இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள மத்திய சிறைகளுக்கும் சென்று சோதனை செய்து வருகிறார். சிறைக்குள் போதை பொருள் புழக்கத்தை தடுத்து நிறுத்த முயற்சிகள் எடுத்து வருகிறார். ஏ.ஐ., திறன் கொண்ட கேமராக்கள் நிறுவி, கைதிகளை கண்காணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இவ்வகையில், நேற்று மங்களூரு சிறை, பல்லாரி மத்திய சிறையில் சோதனையில் ஈடுபட்டார். இதில், பல்லாரி சிறையில் கைதிகளிடம் இருந்து 10 மொபைல் போன்கள், 3 சார்ஜர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் பின், சிறைக்கு கொண்டு வரப்படும் அனைத்து பொருட்களையும் தீவிரமாக சோதித்த பின்னரே, சிறைக்குள் கொண்டு செல்லப்பட்டன. அலோக் குமார் கூறுகையில், ''மாநிலத்தில் உள்ள 54 சிறைகளையும் பார்வையிடுவேன். மங்களூரு சிறையில் தகராறில் ஈடுபடும் கைதிகளும் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். மேலும், சிலர் மாற்றப்படுவர். மொபைல் போன் எப்படி சிறைக்குள் வருகிறது என்பது குறித்து அதிகாரிகள் விசாரிப்பர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை