உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சீரான போக்குவரத்துக்கு நவீன தொழில்நுட்பம் தேவை

 சீரான போக்குவரத்துக்கு நவீன தொழில்நுட்பம் தேவை

பெங்களூரு: பெங்களூரு நகரின் போக்குவரத்து நெரிசல் தொடர்பாக, போலீஸ் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: பெங்களூரு நகரின் பல பகுதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, முக்கிய சந்திப்புகள், வாகன போக்குவரத்து அதிகமுள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, அறிவியல் ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் யோசிக்க வேண்டும். உலக அரங்கில் பெங்களூரு தனக்கென ஓர் இடத்தை பிடித்துள்ளது. இதற்காக, உலக தரம் வாய்ந்த போக்குவரத்து மேலாண்மை அமைப்பை உருவாக்குவது நமது பொறுப்பு. நெரிசல் மிகுந்த சாலைகளில் ஐ.டி.எம்.எஸ்., எனும் நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பு, ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு, ஸ்மார்ட் சிக்னல் அமைப்பு, நேரலை போக்குவரத்து கண்காணிப்பு, தரவுகள் அடிப்படையில் போக்குவரத்து மேலாண்மை நடவடிக்கைகளை பயன்படுத்த திட்டம் வகுக்க வேண்டும். போக்குவரத்து பிரச்னை என்பது போலீசாருக்கு மட்டும் உரியதல்ல. கிரேட்டர் பெங்களூரு ஆணையம், பி.எம்.ஆர்.சி.எல்., - -- பி.எம்.டி.சி., நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை