உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பெண், மகளிடம் அத்துமீறல் மடாதிபதிக்கு தர்ம அடி

 பெண், மகளிடம் அத்துமீறல் மடாதிபதிக்கு தர்ம அடி

சித்ரதுர்கா: சித்ரதுர்கா மாவட்டம், மொளகால்மூரு தாலுகாவின், தம்மேனஹள்ளி கிராமத்தில் ஜம்பன்னா தாதன மடம் உள்ளது. இதில், வெங்கடேஷதாத சுவாமிகள், 48, மடாதிபதியாக இருந்தார். மடத்துக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர். ஆந்திராவை சேர்ந்த பெண்ணும், பக்தையாக இருந்தார். அவ்வப்போது மடத்துக்கு வந்த அப்பெண்ணிடம், நயமாக பேசிய வெங்கடேஷ தாதசுவாமிகள், அப்பெண்ணுடன் முறை தவறிய தொடர்பு வைத்திருந்தார். அது மட்டுமின்றி, மடத்துக்கு வந்த பெண்ணின் மகளுடனும் அநாகரிகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் பெண்ணின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தெரிந்தது. கோபமடைந்த அவர்கள், இரண்டு வாரங்களுக்கு முன், தம்மேனஹள்ளியில் உள்ள மடத்தில் புகுந்து வெங்கடேஷதாத சுவாமிகளை கட்டி வைத்து அடித்து, துவைத்தனர். பின், பலவந்தமாக காரில் துாக்கி போட்டு சென்றனர். இந்த காட்சியை அப்பகுதியினர், தங்கள் மொபைல் போனில் பதிவு செய்துள்ளனர். இரண்டு வாரங்களுக்கு பின், இப்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. சம்பவத்துக்கு பின், மடாதிபதி தலைமறைவாகிவிட்டார். வீடியோவை கவனித்த, சித்ரதுர்காவின் ராம்புரா போலீசார், நடந்த சம்பவம் குறித்து தகவல் சேகரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை