உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / உலக வரைபடத்தில் பெங்களூருக்கு அங்கீகாரம் மாண்டேக் சிங் அலுவாலியா பெருமிதம்

உலக வரைபடத்தில் பெங்களூருக்கு அங்கீகாரம் மாண்டேக் சிங் அலுவாலியா பெருமிதம்

பெங்களூரு: ''உலக வரைபடத்தில் அங்கீரிக்கப்பட்ட நகரமாக, பெங்களூரு உள்ளது,'' என்று பொருளாதார நிபுணர் மான்டேக் சிங் அலுவாலியா பெருமிதமாக கூறினார்.முதலீட்டாளர் மாநாட்டின் 2வது நாளான நேற்று, பிரபல பொருளாதார நிபுணரும், மத்திய திட்ட குழுவின் முன்னாள் துணை தலைவருமான மான்டேக் சிங் அலுவாலியா பேசியதாவது:ஒரு சில நகரங்களின் அபரிமிதமான வளர்ச்சியால், பல சிக்கல்கள் எழுந்து உள்ளது. வளர்ச்சி பகிர்வுக்கும், திறமையான நிர்வாகத்திற்கும் பெரிய மாநிலங்களை பிரிப்பது அவசியம். உத்தரபிரதேசத்தை ஹரித் பிரதேசம், பூர்வாஞ்சல் மாநிலங்களாக பிரிக்கும் திட்டம் முதலில் இருந்தது. அதுபோல் மஹாராஷ்டிராவின் விதர்பாவை தனி மாநிலமாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.நாட்டிலேயே அதிக தனிநபர் வருமானம் கொண்ட மாநிலங்களில், கர்நாடகா 4 வது இடத்தில் உள்ளது. பெங்களூரு உலக வரைபடத்தில் அங்கீகரிக்கப்பட்ட முக்கிய நகரம் ஆகும். தொழில்நுட்ப நிறுவனங்கள் இங்கு வந்ததில் இருந்து முக்கிய மையமாக உருவெடுத்து உள்ளது.இங்குள்ள காலநிலை சாதகமாக உள்ளது. உண்மையான இந்தியா கிராமபுறங்களில் உள்ளது என்பது இப்போது இல்லை. நகரங்களின் வளர்ச்சி பல பிரச்னைகளுக்கு வழிவகுத்து உள்ளது. வளர்ச்சி பங்கீட்டை பொறுத்தவரை 2, 3ம் நிலையில் உள்ள நகரங்கள் மீதும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.குயின் சிட்டி திட்டம்முதலீட்டாளர் மாநாட்டில் மாநில அரசின் லட்சிய திட்டமாக, சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கும் குயின் சிட்டி திட்டம் உள்ளது. இந்த திட்டத்திற்கு மருத்துவ நிறுவனங்களை ஈர்ப்பது தொடர்பாக, துணை முதல்வர் சிவகுமார் தலைமையில் நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடந்தது.அமைச்சர்கள் சுகாதாரம் - தினேஷ் குண்டுராவ், தொழில் - எம்.பி.பாட்டீல், தகவல் தொழில்நுட்பம் - பிரியங்க் கார்கே, மருத்துவ கல்வி - சரணபிரகாஷ் பாட்டீல் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு தனியார் மருத்துவமனைகளின் முக்கியதஸ்கர்கள் பங்கேற்று, குயின் சிட்டி திட்டம் குறித்து விவாதித்தனர்.காற்றாலை மின் உற்பத்தி திறனை அதிகரிக்க ஒப்பந்தம்தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் பேட்டி:முதலீட்டாளர் மாநாட்டில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதில், எனது மாவட்டமான விஜயபுரா வெற்றி பெற்று உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் வேளாண் பதப்படுத்தும் துறைகளில் பெரிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சிக்கான புதிய வழிகளை திறக்கும். குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.விஜயபுராவில் 3,000 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி திறனை மேம்படுத்தவும், அதிநவீன காற்றாலை டர்பன் பிளேடு உற்பத்தி அலகை அமைக்கவும், மாநில அரசுடன் சுஸ்லான் நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது.விஜயபுரா அல்லது கலபுரகியில் ஒரு நாளைக்கு 800 டன் பருப்பை பதப்படுத்தும் ஆலை அமைக்க விங்ஸ் விட்டெரா நிறுவனம் 250 கோடி ரூபாய் முதலீடு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை