மேலும் செய்திகள்
அன்னதானம் சாப்பிட்ட 17 பேருக்கு பாதிப்பு
30-Mar-2025
துமகூரு: சிராவில் பானி பூரி சாப்பிட்ட 25க்கும் மேற்பட்டோர், உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.துமகூரு மாவட்டம், சிரா தாலுகாவின், புக்கா பட்டணா கிராமத்தில், ஸ்ரீநாத் பானி பூரி கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு, பலர் இந்த கடையில் பானிபூரி வாங்கி சாப்பிட்டனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி, வயிற்று வலி, வயிற்று போக்கால் அவதிப்பட்டனர். 25க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்தனர்.இவர்களில் சிலர், புக்கா பட்டணா ஆரம்ப சுகாதார மையத்திலும், மேலும் சிலர் தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெறுகின்றனர். ஆரம்ப சுகாதார அதிகாரிகள், ஸ்ரீநாத் பானிபூரி கடைக்கு வந்து, உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். தரமில்லாத பானிபூரியை விற்றால் நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்தனர். பானிபூரி மாதிரியை கொண்டு சென்றனர்.தகவலறிந்த மாவட்ட உணவு பாதுகாப்பு, தரக்கட்டுப்பாட்டு துறை அதிகாரி சந்திரப்பா, நேற்று காலையில் கிராமத்துக்கு வந்தார். பானிபூரி கடை உரிமையாளரை வரவழைத்து, நோட்டீஸ் அளித்தார்.மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கிராமத்தினரின் உடல் நிலை தேறுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். பானிபூரி தயாரிக்க அசுத்தமான நீர் பயன்படுத்தியதே, அசம்பாவிதத்துக்கு காரணமாக இருக்கலாம் என, அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
30-Mar-2025