உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ரசாயன கழிவுநீரை குடித்து 30க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி

ரசாயன கழிவுநீரை குடித்து 30க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி

மாண்டியா : விஷத்தன்மை கொண்ட நீரை குடித்ததில், 30க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகின. விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.மாண்டியா மாவட்டம், மத்துார் தாலுகாவின், சோமனஹள்ளியில் வசிக்கும் விவசாயிகள் ராஜு, சுனில். இவர்கள் விவசாயத்துடன், ஆடு வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளனர். தங்களின் ஆடுகளை, தினமும் கிராமத்தின் தொழிற்பகுதியில் மேய விடுவது வழக்கம்.நேற்று காலையும் ஆடுகளை அழைத்துச் சென்று மேய்ச்சலுக்கு விட்டிருந்தனர். அங்கு தேங்கியிருந்த நீரை அருந்தியதில், 30க்கும் மேற்பட்ட ஆடுகள், அடுத்தடுத்து சுருண்டு விழுந்து உயிரிழந்தன.தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீர், புல் வெளியில் பாய்கிறது. விஷத்தன்மை கொண்ட இந்த கழிவுநீர் கலந்த தண்ணீரை குடித்ததால், ஆடுகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். ஆடுகள் உயிரிழந்ததால், விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு நிவாரணம் வழங்கும்படி அவர்கள் கோரியுள்ளனர்.இதுகுறித்து, மத்துார் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ