மேலும் செய்திகள்
மயங்கி விழுந்த தொழிலாளி சாவு
17-Nov-2025
கோவிந்த்ராஜ்நகர்: கேஸ் கீசரில் ஏற்பட்ட கசிவில், தாய் - மகள் இறந்தனர். பெங்களூரு கோவிந்த்ராஜ்நகர் பஞ்சசீலா நகரில் வசிப்பவர் கிரண். இவரது மனைவி சாந்தினி, 26. தம்பதியின் மகள் யுவி, 4. நேற்று முன்தினம் மாலையில், வீட்டின் கழிப்பறையில் இருந்த காஸ் கெய்சரை ஆன் செய்து விட்டு, மகளை, சாந்தினி குளிப்பாட்டினார். அப்போது கீசரில் இருந்து ஏற்பட்ட கசிவை, தாய் - மகள் சுவாசித்ததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் போட்டு விழுந்தனர். வேலைக்கு சென்று இருந்த கிரண், இரவில் வீட்டிற்கு வந்து பார்த்த போது, மனைவியும், மகளும் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இருவரையும், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
17-Nov-2025