மேலும் செய்திகள்
உடல்நிலை பாதிப்பால் தாய், மகன் தற்கொலை
12-Jul-2025
சிக்கமகளூரு: பத்ரா ஆற்றில் 'பிக் அப்' வாகனம் விழுந்து, மகன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், மனம் நொந்த தாய் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். சிக்கமகளூரு மாவட்டம், கலசா தாலுகாவின் கொளமாகே கிராமத்தில் வசித்தவர் ரவிகலா, 45. இவரது மகன் ஷமந்த், 22. காபி தோட்டத்துக்கு தொழிலாளர்களை அனுப்பி வைக்கும் பணியை ரவிகலா செய்து வந்தார். தொழிலாளர்களை அழைத்துச் செல்வதற்காக, தன் மகன் ஷமந்துக்கு ஆறு மாதங்களுக்கு முன், 'பிக் அப் டிரக்' வாங்கிக் கொடுத்தார். நேற்று முன் தினம் தொழிலாளர்களை, காபி தோட்டத்தில் இறக்கிவிட்ட பின், ஷமந்த் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். கலசாவின் கொளமாகே கிராமம் அருகில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம், மின் கம்பத்தில் மோதி, பத்ரா ஆற்றுக்குள் பாய்ந்தது. தகவலறிந்து அங்கு வந்த போலீசார், கிரேன் உதவியுடன் வாகனத்தை மேலே எடுக்க முற்பட்டனர். கனமழை பெய்தததால், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. பத்ரா ஆற்றங்கரையில் மகனை நினைத்து, தாய் ரவிகலா கதறி அழுதபடி இருந்தார். மகனின் உடலை மீட்பதற்குள் வீட்டுக்கு வந்த ரவிகலா, நள்ளிரவு ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். நீரில் அடித்துச் செல்லப்பட்ட, ஷமந்த் உடலை மீட்பு படையினர் தேடும் பணி நடைபெற்று வருகிறது. கலசா போலீசார் விசாரிக்கின்றனர்.
12-Jul-2025