உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 2 வயது, பத்து நாள் பெண் குழந்தையை கழுத்தறுத்து கொன்று தாய் தற்கொலை

2 வயது, பத்து நாள் பெண் குழந்தையை கழுத்தறுத்து கொன்று தாய் தற்கொலை

மைசூரு: இரண்டு வயது, பத்து நாள் பெண் குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த தாய், தானும் தற்கொலை செய்து கொண்டார். மைசூரு மாவட்டம், பிரியபட்டணா தாலுகாவின் பெட்டதபுரா கிராமத்தில் வசித்தவர் ரபீயா பானு, 28. இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் அனம் பாத்திமாவுக்கு இரண்டு வயது. இவர் மாற்றுத்திறனாளி. 10 நாட்களுக்கு முன்பு, இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிரசவித்ததால், ரபீயா பானு, தன் தாய் வீட்டில் இருந்தார். நேற்று முன் தினம் மதியம், வீட்டில் யாரும் இல்லை. அப்போது ரபீயா பானு, தன் இரண்டு மகள்களின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அதன்பின் தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாக, ரபீயா பானு வெளியே வராததால், அக்கம், பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, விஷயம் தெரிந்தது. போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த பெட்டதபுரா போலீசார், மூவரின் உடல்களையும் மீட்டனர். வழக்குப் பதிவு செய்து, விசாரணையை துவக்கி உள்ளனர். மூத்த மகள் மாற்றுத்திறனாளி; இரண்டாவதும் பெண் குழந்தையாக பிறந்தது. இவரது குடும்பத்தில் அதிகமான பெண் குழந்தைகள் பிறந்தால் ஏற்க மாட்டார்களாம். எனவே மன அழுத்தத்துக்கு ஆளாகி, குழந்தைகளை கொன்று, தானும் தற்கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. விசாரணைக்கு பின்னரே, உண்மையான காரணம் தெரியும் என, போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தால், ரபீயா பானு கணவரும், அதிர்ச்சி அடைந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை