உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மக்கள் பிரச்னைகளை மறந்து விட்டனர் காங்., அரசு மீது எம்.பி., யதுவீர் சாடல்

மக்கள் பிரச்னைகளை மறந்து விட்டனர் காங்., அரசு மீது எம்.பி., யதுவீர் சாடல்

குடகு: ‘‘மக்கள் பிரச்னைகளை மறந்து விட்டனர்,’’ என, காங்கிரஸ் அரசை, மைசூரு பா.ஜ., – எம்.பி., யதுவீர் தாக்கி பேசியுள்ளார். குடகின், விராஜ்பேட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி: மைசூரு மக்களால் லோக்சபாவுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு, அவர்களின் மக்கள் பிரதிநிதியாக பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன். மக்களுக்கு பணி செய்வது எனது முன்னுரிமை. நான் எங்கும் என்னை, மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர் என்று காட்டி கொள்ளவில்லை. என்னை பற்றி தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைப்பதை காங்கிரஸ் தலைவர்கள் நிறுத்த வேண்டும். அரசு செய்யும் தவறுகள் குறித்து பேசட்டும். வாக்குறுதி திட்டங்கள் என்ற பெயரில், ஒரு கையில் பணம் கொடுத்துவிட்டு, இன்னொரு கையில் அதை அரசு பறிக்கிறது. யுவநிதி திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளதா என்றே தெரியவில்லை. ராகுலுக்கு பிரதமர் பட்டம் சூட்டுவதில் மும்முரமாக இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள், கர்நாடக மக்களின் பிரச்னைகளை மறந்து விட்டனர். மாநில வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்காமல், காங்கிரஸ் கட்சி அரசியல் பிரச்னைகளில் மூழ்கியுள்ளது. நிதி ஒதுக்கவில்லை என, மத்திய அரசை குறை சொல்வதை விட்டு, 16வது நிதி ஆணையம் முன் வலுவாக வாதிட்டு, கூடுதல் நிதி பெற, அரசு தரப்பு முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ