உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பயன்பாட்டிற்கு வராமல் வீணடிக்கப்படும் நகராட்சி நிதி

 பயன்பாட்டிற்கு வராமல் வீணடிக்கப்படும் நகராட்சி நிதி

தங்கவயல்: பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் நகராட்சி நிதி வீணடிக்கப் படுகிறது. ராபர்ட்சன்பேட்டையில் குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டக் கூடாது. அவைகளை குப்பை தொட்டிகளில் தான் கொட்ட வேண்டும். சுற்றுப் புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நகராட்சி பஸ்நிலையம், பி.எம்., சாலை, சுராஜ் மேல் சதுக்கம், பிரிட்சர்ட் சாலை என பல இடங்களில் ஸ்டீல் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டது. இதற்காக பல லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. நகராட்சி கவுன்சிலர் களான மக்கள் பிரதிநிதிகள் பதவியில் இருந்தவரை, அவைகள் இருந்தன. அவர்களின் பதவிக்காலம் முடிந்த பின்னர், ஸ்டீல் குப்பைத்தொட்டிகளை எங்கே தேடினாலும் காணப்படவில்லை. இதேபோல் பஸ் நிலையத்தில், 100 பூந்தொட்டிகள் வைத்தனர். அவை களையும் காணவில்லை. பஸ் நிலையத்தில் பஸ்கள் வந்து செல்லும் நேரத்தை தெரிவிக்கவும், நகராட்சியின் முக்கிய தகவல்களை தெரிவிக்கவும் பயன் படுத்த 'டிவி' பெட்டிகள் நிறுவினர். அவை எதுவுமே இயங்கவில்லை. நகராட்சியில் திட்டங்களுக்கு நிதி செலவிடப்படுகிறதே தவிர, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு எதுவும் பயன்படவில்லை என பலதரப்பினரும் குறை கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை