உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அரசு பெண் ஊழியர் கொலை: வாலிபர் கைது

அரசு பெண் ஊழியர் கொலை: வாலிபர் கைது

விஜயபுரா: விஜயபுரா மாவட்டம், இன்டி தாலுகாவின், கோட்னால் கிராமத்தில் வசித்தவர் ரேணுகா, 30. இவரது கணவர் சாயபண்ணா கன்னொல்லி, தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறையில் பணியாற்றினார். அவர் பணியில் இருக்கும் போதே உயிரிழந்ததால், கருணை அடிப்படையில் அவரது மனைவி ரேணுகாவுக்கு, சமூக நலத்துறையில் குமாஸ்தா வேலையை அரசு வழங்கியது.இவர் கோட்னால் கிராமத்தில் உள்ள, தன் தாய் வீட்டில் வசிக்கிறார். இங்கிருந்தே ஸ்கூட்டரில் பணிக்கு சென்று வருகிறார். இன்டியின் அகரகேட் கிராமத்தை சேர்ந்த சஞ்சு பனசோடே, 30, ரேணுகாவுடன் நெருங்கி பழக விரும்பினார். தன்னுடன் பேசும்படி தினமும் பின் தொடர்ந்து தொந்தரவு கொடுத்தார். ரேணுகா பேச மறுத்தார்.ரேணுகா நேற்று காலை வழக்கம் போன்று, இன்டியின், திப்பு சுல்தான் சதுக்கம் வழியாக, ஸ்கூட்டரில் பணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த சஞ்சு பனசோடே, வழி மறித்தார். தன்னுடன் பேசும்படி கட்டாயப்படுத்தினார். இதற்கு மறுப்பு தெரிவித்த ரேணுகாவை கத்தியால் பல முறை குத்தினார். இதில் காயமடைந்த அவரை அப்பகுதியினர், மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்த இன்டி போலீசார், சஞ்சு பனசோடேவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !