உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்தில் பங்கேற்ற முஸ்லிம் தலைவர்

ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்தில் பங்கேற்ற முஸ்லிம் தலைவர்

கொப்பால்: ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்தில் உள்ளூர் முஸ்லிம் தலைவர் பங்கேற்றார். கொப்பால் மாவட்டம் குஷ்டகி பகுதியில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் ஊர்வலம் சமீபத்தில் நடந்தது. குஷ்டகி தோட்டிஹால் கிராமத்தை சேர்ந்த பா.ஜ., உள்ளூர் தலைவரும், முஸ்லிம் சமூக தலைவரான லாட்சாப் கொல்லியும் பங்கேற்றார். இவர், மற்றவர்களை போல வெள்ளை நிற சட்டை, காக்கி நிற பேண்ட், கையில் தடியுடன் பங்கேற்றார். முஸ்லிம் தலைவர் ஆர்.எஸ்.எஸ்., சீருடை அணிந்து பேரணியில் பங்கேற்றதற்கு, உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தோட்டிஹாலில் நடக்கவுள்ள கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி தேர்தலில் போட்டியிடவுள்ள லாட்சாப், ஹிந்துக்களின் ஓட்டுகளை பெறுவதற்காகவே ‘ஸ்டன்ட்’ அடிப்பதாக கூறி உள்ளனர். இதுகுறித்து, லாட்சாப் கூறியதாவது: கொப்பால் மாவட்டத்திலேயே எனது கிராமத்தில் தான், முதன் முதலில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு துவங்கப்பட்டது. நான் சிறுவயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளின் மீது ஈர்ப்பு கொண்டிருந்தேன். தேசபக்தியின் காரணமாகவே ஆர்.எஸ்.எஸ்., பேரணியில் பங்கேற்றேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை