மேலும் செய்திகள்
மூதாட்டியை கொலை செய்து தங்க நகைகள் கொள்ளை
27-Oct-2026
தேவனஹள்ளி: கிரஹப்பிரவேசம் நடந்த ஒரு மாதத்தில், வீட்டுக்குள் நுழைந்த முகமூடி கும்பல், 117 கிராம் தங்க நகைகள் உட்பட, விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து தப்பியது. பெங்களூரு ரூரல் மாவட்டம், தேவனஹள்ளி தாலுகாவின், புரா கிராமத்தில் வசிப்பவர் மலே சொன்னப்பா. இவர் பல இடங்களில் கடன் வாங்கி, புதிதாக வீடு கட்டியுள்ளார். கடந்த மாதம் கிரஹப்பிரவேசம் நடத்தினார். நேற்று முன்தினம் நள்ளிரவு, இவரும், இவரது மனைவியும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். அப்போது முகமூடி அணிந்த மூன்று மர்மநபர்கள், பைக்கில் அங்கு வந்தனர். சொன்னப்பாவின் வீட்டின் முன் கதவை, உடைத்து உள்ளே புகுந்தனர். சத்தம் கேட்டு அறையில் இருந்து வெளியே வந்த சொன்னப்பாவையும், அவரது மனைவியையும் அரிவாள், இரும்புத்தடியை காட்டி, மிரட்டி சத்தம் செய்ய விடாமல் தடுத்தனர். வீட்டில் இருந்த பீரோவில், 117 கிராம் தங்க நகைகள், 8,000 ரூபாயை கொள்ளையடித்தனர். தம்பதியின் மொபைல் போனை பறித்து கொண்டு, பைக்கில் தப்பினர். பாதிக்கப்பட்ட சொன்னப்பா, விஜயபுரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் ஆய்வு செய்கின்றனர்.
27-Oct-2026